(காடுவெட்டி )திரைப்பட விமர்சனம். தொகுப்பு.
ஆர்.சந்திரசேகர்.

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக இந்தப்படத்தில் நடித்துள்ளார்.படத்தின் இயக்குநர் சோலை ஆறுமுகம்.
இணை தயாரிப்பாளராக இருந்து இயக்கி, உள்ள திரைப்படம்,
காடுவெட்டி.
கல்வியும், பொருளாதார வளமும் உள்ள குடும்பமான கதையும் கூட காதலை எப்படி அணுகினார்கள்.
பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த குடும்பம் எப்படி காதலை எதிர்கொள்கிறது என்பதைச் சொல்லி இருக்கிறார்கள். முக்கிய கதையா
கிராமத்து காதல் – சாதி விவகாரம்தான்! நடுநாடு பகுதியில், காடுவெட்டி கிராமத்தைச்சேர்ந்தவரா கதாநாயகனாக ஆர்.கே.சுரேஷ்
தன் சாதிக்காரர்களுக்கு எந்த பிரச்சினை என்றால் நொடி பொழுதில் முன்னின்று தீர்த்து வைப்பார்
இது தொடர்பாக ஒரு வழக்கில் சிறையில் அடைக்கப்படுகிறார்.
அந்த நேரத்தில் இருவேறு சாதியைச் சேர்ந்த காதல் ஜோடிக்கு, பிரச்சினை ஏற்படுகிறது.
பெண்ணை கொலை செய்துவிடும்படி ஊர் மக்கள் பெற்றோரிடமே சொல்கிறார்கள்.
பெண்ணின் தந்தை, காதலனுடன் வழி அனுப்பி வைக்கிறார்.
காதலனின் சாதியைச் சேர்ந்த தலைவர், காதலனுக்கு பணம் கொடுத்து, “வெளியூரில் மூன்று மாதம் குடும்பம் நடத்து. பிறகு நீ மட்டும
ஊருக்கு போய் விட்டுத் திரும்பி வந்துவிடு” என்கிறார்.
அவரது நோக்கத்தை அறிந்த காதலன், கடுமையாக எதிர்க்கிறான்.
காதலியோடு வெளியூர் சென்று விடுகிறான்.
சாதித் தலைவர் என்ன செய்தார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.
நாயகனாக
ஆர்.கே.சுரேஷ். தன் சாதி மீதும், சாதித் தலைவர் மீதும் அவர் காட்டும் அதீத அன்பு விசுவாசமும் எதிரிகளை பந்தாடுவது என அதிரடியாக நடித்து உள்ளார்.
மனைவி மீதானக் காதலை வெளிப்படுத்தும் போது நெகிழவும் வைக்கிறார். சிறப்பானப் படைப்புகள்
நாயகியின் தந்தையாக வரும் திரைப்பட இயக்குநர் சுப்ரமணிய சிவா, அற்புதமான நடிப்பை இரவு நேரக்காட்சியிலவெளிப்படுத்தி உள்ளார். அவர் தனது மகளுக்கு தன் கையால் கறி சோத்தை சமைத்து அதுல பாலிடாயில் விஷம் கலந்துக் கொடுக்கும் காட்சியின் போது எல்லோரை அதிர வைக்கிறார்.
அடுத்தடுத்த காட்சிகளில் நெகிழ வைக்கிறார்
அறிமுக இசையமைப்பாளர் சாதிக்கின் பின்னணி இசையை படத்துடன் ஓர் அங்கமாக கதாபாத்திரமாக கூடவே வருகிறது. பாராட்டுகள்.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு இசையில் பாடல்கள் ஓகே ரகம்.கிராமத்து
அழகை அற்புதமாகபதிவு செய்துள்ளார் .
ஒளிப்பதிவாளர் புகழேந்தி.
சாதி கடந்த காதல், அதனால் குடும்பத்தில் – உறவினர்கள் மத்தியில் ஊர்மக்களிடையே ஏற்படும் எதிர்விளைவுகளை எதார்த்தமாக பதிவு செய்து உள்ளார்
இன்றைய இளைஞர்கள் சிலர் பலரின் முட்டாள்த்தனமான காதல் வெறி அப்படித்தான் சொல்ல வேண்டி இருக்கிறது-
அதனால் ஈர்க்கப்படும் இளம் பெண்கள் என சொல்லி இருக்கிறார்கள்.
இந்தக் காதல் என்கிற வரையறைக்குள் அடைக்காமல், “இது திட்டமிட்ட சதியா.. உண்மையான அன்பா.. அப்பாவித்தனமா.. என
நாயகியின் தந்தை புலம் காட்சியின் மூலம் சமூகத்தில் ஒரு கேள்வியை உறைய வைத்து நெகிழ்வான செய்தியை பகிர்துள்ளார் இயக்குனர்