பூமர் அங்கிள் திரைப்பட விமர்சனம். தொகுப்பு ஆர்.சந்திரசேகர்.
அன்கா மீடியா தயாரிப்பில் யோகி பாபு, ஓவியா, ரோபோ சங்கர், எம் எஸ் பாஸ்கர், மறைந்த சேஷு, பாலா, தங்கதுரை, சோனா, மதன் பாபு நடிப்பில்
தில்லையின் எழுத்தில் ஸ்வாதேஷ் இயக்கி இருக்கும் காமேடி படம்.
கிராமம் ஒன்றில் பலான படம் பார்த்த குற்றத்துக்காக நான்கு சிறுவர்கள் தண்டிக்கப்பட, ஒருவன்
மட்டும் ஊரை விட்டுத் தப்பி வருகிறான் யோகி பாபு.
ஒரு ரஷ்யப் பெண்ணை மனது கொள்கிறான் .
அது போதாது என்று அவன் ஆண்மை பெருக்கும் மருந்து என்று அனுப்பிய வைக்க மருந்தை சாப்பிட்ட ஒரு நண்பனுக்கு பாலா திக்குவாய்,
இன்னொரு நண்பனுக்கு தங்கதுரை காது கேளாமை, அடுத்து ஒருவனுக்கு சேஷு முதுமைத் தோற்றம் என்று பாதிப்பு
ஏற்பட நாலாவது மாத்திரையை சாப்பிட்ட ஊரு நாட்டமைக்கு ரோபோ சங்கர்.
ஆண்மைக் குறைவு என்று பிரச்சனைகள் ஏற்பட, நால்வரும் அந்த
நண்பன் ஊருக்கு மீண்டும் வந்தால் பழி வாங்கக் காத்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ரஷ்யாக்காரியிடம் இருந்து கணவன் விவாகரத்துக்
கேட்கிறான் . அவளோ , ” என்னை உன் ஊருக்கு
அழைத்துப்,போய், உன் அப்பாவான விஞ்ஞானி மதன்பாப் இருந்த அரண்மனையில் சில நாட்கள் தங்க வை . அப்புறம் விவாகரத்து தருகிறேன் ”
என்கிறாள் .
வேறு வழியின்றி அவன் மனைவியோடு ஊருக்கு வர, நண்பர்கள் அவனை பழி வாங்க முயல ,
விஞ்ஞானியான அப்பாவின் சக்தி மான் போன்ற ஒரு கண்டுபிடிப்பு ரகசியத்தை திருடவே
ரஷ்யாக்கரி வந்திருக்கிறாள் என்பது கணவனுக்குத் தெரிய வர, ரஷ்யாக்காரி உருவாக்கிய
ஹோலோகிராம் உருவமான நடிகை ஓவியா அந்தக் கணவனை மயக்க,
அதற்குள் ரஷ்யாக்காரி நாட்டமை உடம்புக்குள் ஹல்க் போன்ற அந்த
சக்தியை உருவாக்க , போட்டியாக மறுதரப்பு உருவாக்கும் சக்திமான், சூப்பர் மேன், ஸ்பைடர் மென் சக்திகள்
ஹல்க்கிடம் அடி வாங்க , நடந்தது என்ன என்பதே மீதிக்கதை தொடரும்.
ஹல்க், ஹோலோ கிராம், சக்தி மான், ஸ்பைடர் மேன்,சூப்பர் மேன் என்று யோசித்து
ஒரு கதை பண்ண முயன்று இருக்கிறார்கள். ஆனால் திரைக்கதை படமாக்க
குழந்தைகளைக் கவர சில விஷயங்கள், காமெடிக்கு நிறைய காமெடி நடிகர்கள் , கிளாமருக்கு ஓவியா மற்றும் இடுப்புக் கீழே துணி போட்டால் தடிப்பு அரிப்பு நோய் வருமோ என்று யோசிக்க
வைக்கும் சில குட்டைக் கால்சட்டை குண்டு மல்லிகள் ஆகியோர் இருந்தும் .. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் …
”தண்ணீர் தவிச்சா கண்ணீர் விட்டுக் குடிச்சுக்கோ” கதையாக ஆர்ட் டைரக்ஷன் என்ற பெயரில் போராடி இருக்கிறார் பி ஏ ஆனந்த் ..
பபூன் வேடத்தில் கவர்கிறார் மறைந்த சேஷு . ரஷ்யாக்காரியாக நடித்த நடிகையை பெரும்பாலான காட்சிகளில் ஓடிக் கொண்டு இருக்கிறார் .
மற்ற காமெடி நடிகர்கள் அனைவரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் . எப்போதாவது சிரிப்பு, “வாம்மா மின்னல்….” கதையாக வந்து போகிறது.
உண்மையில் யோகி பாபுவை வாய் பேச முடியாதவராக நடிக்க வைத்து ஒரு வார்த்தை… எஸ் .. ஒரு வார்த்தை கூடப் பேச விடாமல் எந்த ஒரு டைரக்டர் நடிக்க வைக்கிறாரோ அவருக்கு கோவில் கட்டலாம் . அந்த
அளவுக்கு பேசிக் கொண்டும் கத்திக் கொண்டும் இருக்கிறார் யோகிபாபு
அவர் போலவே தங்கதுரை எல்லாம் தொண்டை பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் .
பூமர் அங்கிள் சிரிப்பு காட்டும் காமெடி பேசும் பொம்மைகள். குழந்தைகள் பார்க்க வேண்டிய பொழுதுப் போக்கு நிறைந்த படம்