சாகுந்தலம் திரை விமர்சனம்

தெலுங்கில் ஹிட் அடித்த ஒக்குடு, ருத்ரமாதேவி போன்ற படங்களை இயக்கிய குணசேகர் தற்போது இந்த காவியத்தை திரைப்படமாக்கியுள்ளார்

சாகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார் தலைசிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர் போன்றவை இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது

இயக்குநர் குணசேகரின் முயற்சி வெற்றி பெற்றுள்ளதா? காளிதாசரின் காவியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அதை அப்படியே படமாக மாற்றியுள்ளாரா?
என்பதை பார்க்கலாம் வாங்க

காளிதாஸாவின் பிரபல கவிதைகளில் ஒன்றை பிரமாண்டமாக காட்டியிருக்கிறார்கள் இந்த படத்தில். சகுந்தலா(சமந்தா), துஷ்யந்த்(தேவ் மோகன்) இடையேயான கனவு போன்ற காதலாகட்டும், போர் காட்சிகளாகட்டும் மிகவும் பிரமாண்டமான முறையில் காண்பித்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

புலிகள் உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து ஒரு கிராமத்தை துஷ்யந்த் காப்பாற்றும் காட்சியும் சிஜிஐயில் அசத்தலாக காட்டியிருப்பது சிறப்பு.

அதன் பிறகு அழகான காட்டில் பட்டாம்பூச்சிகள் பறக்க, மயில்கள் ஆட, மலர்கள் மத்தியில் சகுந்தலாவும், துஷ்யந்தும் காதலிப்பதாக காட்டுகிறார்கள். நம்மை அந்த உலகிற்கே அழைத்துச் சென்று ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் குணசேகர். அவ்வளவு தத்ரூபமான படப்பிடிப்பு.

பிரமாண்டத்தில் குறை சொல்லவே முடியாது. விஷுவல், விஎஃப்எக்ஸ், கலை அலங்காரம், ஒளிப்பதிவை பார்த்து மிரண்டு போகவைக்கிறது

மணிசர்மாவின் இசை படத்திற்கு பக்கபலம்.

சமந்தா மிகவும் அழகாக இருக்கிறார். தன் கதாபாத்திரத்தை உணர்ந்து ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு நேர்மையான அரசன், பயமில்லா போர் வீரன், காதலனாக தேவ் மோகன் தனித்து தெரிகிறார். சமந்தா வுக்கு சரியான ஜோடி

காதல் காட்சிகளை போன்றே ஆக்ஷன் காட்சிகளும் திறம்பட நடித்திருக்கிறார் தேவ் மோகன். மேனகாவாக சிறிது நேரமே வரும் மதுபாலா ரசிகர்களை ஈர்க்கிறார்.

அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா தன் க்யூட் நடிப்பால் கவர்கிறார்.

விஷுவல்ஸுக்காக சாகுந்தலம் படத்தை கண்டிப்பாக தியேட்டரில் தான் பார்த்து ரசிக்க வேண்டும். தெலுங்கு தவிர்த்து தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாகியிருக்கிறது

மொத்தத்தில் இந்த சாகுந்தலம் அனைவரும் காண வேண்டிய படம்