ஃபர்ஹானா – திரை விமர்சனம்
உழைக்கும் பெண்கள் நிச்சயமாக கோபம் கொள்வார்கள்
நடிகர்களை விட இந்த படத்தில் மெட்ரோ ரயிலே அதிகம் நடித்திருக்கு எத்தனை cut shots ,close up shots , point of veiwe shots இயக்குனர் நெல்சன் வெங்கடேசின் கத்துக்குட்டி தனமான ஐஸ்வர்யா ராஜேசின் பாத்திரப்படைப்பில் கறை படிந்தது பெரும்பான்மையான குடும்ப பெண்களின் தியாகதில் ஏற்பட்ட கறையாகவே உணர முடிகிறது
இயக்குனரின் மனோவியாதி செல்வராகவன் பாத்திரம் வழியே வெளி பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் தோன்றுகிறது.

மூன்று குழந்தைக்கு தாய் ஐஸ்வர்யா ராஜேஷ் ,நன்றாக புரிந்து கொண்ட கணவன் ஜித்தன் ரமேஷ் ,சகோதரிகள் ,கட்டுகோப்பான அப்பா இவர்கள் இருந்தும் வெறும் செல்வராகவன் குரலை மட்டும் நம்பி ஐஸ்வர்யா ராஜேஷ் தேடி போகிறார் ,செல்வராகவன் பிச்சைகாரன் மூலம் கொடுத்த கிப்ட்டை திருட்டு தனமாக தன் பிள்ளைகளுக்கு தெரியாமல் பிரித்து பார்த்து மகிழ்ச்சி அடைகிறார் ,ஆபீஸ் டேபிள் மேல் வைத்து ரசிக்கிறார், என்றால் அவர் என்ன மாதிரியான கேரக்டர் என்பதை சொல்வதிலேயே இயக்குனரின் சிந்தனை தப்பாகிறது ,களங்கப்படுகிறது.
செல்வராகன் காதல்கொண்டேன் தனுஷ் போல் செமி சைக்கோ வா என்றால் அதுவும் இல்லை அவர் ஐஸ்வர்யாவை பழி வாங்குகிறாராம்…. ஐஸ்வர்யா செய்யும் பிரண்ட்லி கால் செண்டர் வேலையின் ப்ளஸை சொல்ல அனுமோல் கேரக்ட்டர் ,மைனசை சொல்ல ஐஸ்வர்யா தத்தா கேரக்ட்டர் என அபத்தமான திரைக்கதை , எல்லோரும் அவர்களின் தரப்பு தவறுக்கு நியாயம் கற்பித்தால் சரி என்னதான் முடிவு போலீஸ் வந்து ஐஸ்வர்யாவை எச்சரித்து விட்டு செல்வராகவனை கைது செய்கிறது .படம் முடிகிறது.
குடும்ப வறுமைக்காக வேலைக்கு செல்லும் அத்தனை பெண்களின் தன்மானத்தை உரசி பார்க்கும் பர்கானா போன்ற திரைப்படங்கள் பெரியார் இருந்த போது வந்திருந்தால் நிச்சயம் போராட்டம் நடந்திருக்கும் காசுக்காக என்ன வேண்டுமானாலும் எழுதலாம் படமாக்கலாம் என்று அலையும் கூட்டத்தில் மீண்டும் ஒரு கேவலமான பொழுதுபோக்கு படம்.

வேலைக்குப் போகும் பெண்களுக்கு எல்லா இடத்திலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது அது முஸ்லிம் பெண்ணாக இருந்தாலும் சரி கிறிஸ்தவ பெண்ணாக இருந்தாலும் சரி இந்து பெண்ணாக இருந்தாலும் சரி அது எல்லாம் தாண்டி சமாளித்து குடும்பத்திற்காக வெற்றிகரமாக உழைத்துக் கொண்டிருக்கும் அத்தனை மகளிரும் நிச்சயம் யோசிப்பார்கள்.
பெண்ணை பெற்ற பெற்றோர்கள் தன் பெண் கால் சென்டர் வேலைக்கு செல்வது இப்படித்தான் செய்கிறார் என்று யோசிப்பார்கள் எனவே தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
படம் வேண்டுமானால் வியாபார ரீதியாக பணத்தை கொடுக்கலாம் ஆனால் கருத்தியல் ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாத படம்.