ஒவ்வொருவருக்கும் அவர்களின் அமைதியான தூக்கம் தான் அது குட் நைட்டா ?பேட் நைட்டா ?என்பதை முடிவு செய்யும் . பத்து சிங்கத்து மத்தியில கூட தூங்கிடலாம் பாழாப்போன குறட்டை சத்தத்துல மட்டும் தூங்க முடியாது.
நம்ம ஹீரோ அப்படி குறட்டை விடுற மணிகண்டன் உடன் கல்யாணம் ஆகி முதல் இரவை துவங்கராங்க ஹீரோயின் மேத்தாரகுநாத் பல இரவுகள் ,பல ட்ரீட்மெண்ட்களை கடந்தும் மணிகண்டனின் குறட்டை குறையில .அவர் ஆபிஸ் டார்ச்சரும் குறையில .இதனால கணவன் மனைவிக்குள்ள பிரியர சூழல் உருவாகி அவர்களின் உண்மை காதல் இணைய வைக்குது .
இந்த கதையை இரண்டு மணிநேரத்துக்கு சொல்ல முடியாதுனு புரிஞ்சு கிட்ட இயக்குனர் விநாயக்சந்தரசேகரன் புத்திசாலித்தனமா ஹீரோவிற்கு யதார்த்தமா நடிக்க கூடிய அம்மா ,அக்கா ,மாமா ரமேஷ்திலக் ,தங்கச்சி ,தாத்தா பாலாஜி சக்திவேல் ,பாட்டி ,நாய் குட்டின்னு ,சின்ன டீமை பெருசா நடிக்கவச்சு ,சிரிக்க வச்சு,சின்னதா ஜெயிக்க வச்சிருக்கறாரு ,குறிப்பா மேத்தாரகுநாத் ராசி இல்லாதவர் அப்பா அம்மாவை காவு வாங்கியவர் என்ற குற்ற உணர்வு உள்ளவர் என்பதை அவரின் பேச்சு ,அமைதியான அணுகு முறையில் அற்புதமா வெளி கொண்டு வந்திருக்கறாரு.
சீரியல் தனமான சில காட்சிகள் ,ஹீரோ,ஹீரோயின் இருவருக்குமான காட்சிகள் இவற்றை தவிர்த்து இருக்கலாம் இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் பூக்கும் தருணம் அற்புதமான
ஒரு அனுபவம். ஒரு வழியாக திருமணத்தில் முடிகிறது. முதல் இரவில் தான் ஹீரோவுக்கு இருக்கும் குறட்டை பிரச்சனை ஹீரோயினுக்கு தெரிகிறது. இதனால் என்ன நடக்கிறது? ஹீரோ தன்னுடைய குறட்டை பிரச்சனையை சமாளிக்க என்னவெல்லாம் செய்கிறான்? ஹீரோயின் இதனை எவ்வாறு கையாள்கிறாள் உள்ளிட்ட கேள்விகளுக்கு படம் பதில் சொல்லும்
கடந்த ஆண்டு ஜெய் பீம் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரமுமே மனசை ரணமாக்கிய நிலையில், ராசா கண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டனை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது. அவ்வாறு கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்திருந்தார்.
இப்போது அவருடைய நடிப்பில் குட் நைட். எதார்த்தமான நடிப்பு நன்றாக இருக்கிறது
விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் பாலாஜி சக்திவேல், மணிகண்டன், மீதா ரகுநாத் . முழுக்க முழுக்க ரசிகர்களை வயிறு சிரிக்க வைக்கிறது.

கதாநாயகியாக மீத்தா நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. மாமா கதாபாத்திரத்தில் ரமேஷ் திலக் நடித்திருக்கிறார். காமெடியில் அவர் செய்யும் சேட்டைகள் அருமையாக இருந்தாலும் குடும்பத்தை கொண்டு செல்லும் விதம் பாராட்டுக்குரிய ஒன்று. இவர்களை தொடர்ந்து படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இயக்குனர் கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்திற்கு பாராட்டுகள்
மேலும், இயக்குனர் கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்திருக்கிறார். அதோடு படத்தில் நடக்கும் ஒவ்வொரு காட்சிகளும் நம் வீட்டில் நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தான். ஆரம்பத்தில் தான் கதை மெதுவாக செல்வது போல் இருக்கிறது. இருந்தாலும், இரண்டாம் பாதியில் இயக்குனர் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். மொத்தத்தில் இந்த கோடைகால விடுமுறைக்கு குட் நைட் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும்
நிறை:
மணிகண்டனின் நடிப்பு சிறப்பு அவர் கதாபாத்திரம் ப்ளஸ் அழுகை. பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக நாயகி ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல்.
திரை கதை பின்னணி இசையும் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்
குறை:
நாயகியே எனக்கு குறட்டை பிரச்சனை இல்லை என்று சொன்ன போதும்
பிடிவாதமாக இரும்பு பிடிப்பது மனைவியை விட்டு ஒதுங்குவது இருவரும் கலந்து பேசாதது
மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக குறைகள் எதுவும் இல்லை
மொத்தத்தில் இந்த குட் நைட் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் நடித்த நடிகர்களுக்கும் டெக்னீஷண்களுக்கும் குட் டைம் தான்