கஸ்டடி திரை விமர்சனம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஅவர்கள் கதையா கஸ்டடி

வெங்கட் பிரபு பழிக்கு பழி வாங்க கதை எழுதி இருக்கிறாரா

இந்த படம் பார்த்து அஜீத் வெங்கட் பிரபு வுக்கு அழைப்பு விடுப்பாரா

தெலுங்கு ஹீரோக்கள் தமிழ் இயக்குனர் களுக்கு இனியும் வாய்ப்பு கொடுப்பார்களா

வாங்க இனி இந்த படத்தின் விமர்சனம் பார்க்கலாம்

மதலீலை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்கியுள்ள திரைப்படம் கஸ்டடி. நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க சரத்குமார், பிரியாமணி ஆகியோர் வில்லனாக நடித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் நடிகர்கள் அரவிந்த் சாமி, ஜீவா, கயல் ஆனந்தி, பிரேம்ஜி, ராம்கி என பலர் நடித்துள்ளனர்

நாகசைதன்யா
கீர்த்தி ஷெட்டியை காதலிக்கின்றார், ஆனால், கீர்த்தி வீட்டிற்கு இது பிடிக்காமல் வேறு ஒரு பையனுடன் திருமணம் செய்ய முயற்சிக்கின்றனர்.

Actor Naga Chaitanya in Custody Movie Images HD

நாக சைதன்யா மேல் அதிகாரிக்கு இவரை சுத்தமாக பிடிக்காமல் இருக்க, ஒரு நாள் ரோட்டில் அரவிந்த் சாமி, சம்பத் ராஜ் இருவரும் அடித்துக்கொள்கின்றனர்.

இவர்கள் இருவரையும் நாக சைதன்யா பிடித்து, சிறையில் வைக்க, பிறகு தான் தெரிகிறது சம்பத் ராஜ் CBI ஆபிசர் என்று. அந்த இடத்தில் டிவிஸ்ட் [நாக சைதன்யா முதலில் தமிழுக்கு வந்ததற்கு ஒரு வெல்கம், கொஞ்சம் டப்பிங் குறை இருந்தாலும், அவரின் பெர்ப்பாமன்ஸால் தூக்கி நிறுத்துகிறார், ஒரு ஹெட் கான்ஸ்டபுளாக வந்து படம் முழுவதும் பரபரப்பாக கொண்டு செல்வதில் முக்கிய பங்கு பெறுகிறார்.

அரவிந்த்சாமி சாகும் நேரத்தில் கூட அவர் அடிக்கும் கவுண்டர் தியேட்டரில் விசில் சத்தம், படம் 90களில் நடப்பதால் டெக்னாலாஜி எதுவுமில்லாதது படத்தின் திரைக்கதைக்கு ஒரு பலம்.

அதே நேரத்தில் படத்தின் முதல் அரை மணி நேரம் சோதனை தான், அரவிந்த் சாமி வரும் வரை படம் மந்தமாகவே செல்கிறது.

சரத்குமார், ஜீவா கேமியோ, அதை விட ஏஜெண்ட் ப்லிப்ஸ் என விக்ரம் ஸ்டைலில் வரும் ராம்கி என அங்கங்க சர்ப்ரைஸ் உள்ளது.

இரண்டாம் பாதி என்ன தான் விறுவிறுப்பான கதையாக சென்றாலும் பல படங்களில் பார்த்த காட்சிகள் டுவிஸ்ட்கள் என்று நம் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

பாடல்கள் ஒன்று கூட மனதில் ஒட்ட வில்லை, கதிர் ஒளிப்பதிவு பல இடங்களில் செட் என்பது அப்டியே தெரிகறது.

பலம்
நடிகர், நடிகைகளின் நடிப்பு

அரவிந்த் சாமி கவுண்டர் வசனங்கள்

படத்தின் சன்டை காட்சிகள்
தமிழ் சினிமா சந்தித்த அதே பழைய கதை. திரைப்படத்தின் தொடக்கக் காட்சிகளில் நடிகர்கள் தெலுங்கில் பேசும் வசனங்கள் தமிழுக்கு டப் செய்யப்பட்டிருப்பதால் உதட்டு அசைவுகள் பொருந்தாதது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு நடிகர்கள் நேரடியாக தமிழிலேயே பேசும் காட்சிகள் இடம்பெறுகின்றன. ஆறுதல்

பிரேம்ஜி காமெடி
பேரில் தேவையில்லாத லேக

இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்து இருக்கிறார்கள்.
பின்னணி இசை பலம்
. வில்லனை அழைத்துக் கொண்டு ஒரு பாதாள சுரங்கத்தில் ஓடும் நாயகனை, போலீஸ் உயரதிகாரியான சரத்குமார் சுற்றி வளைத்து விடுகிறார். அவர் கையில் துப்பாக்கி. தப்பிக்க வழியே இல்லை.

இந்த இடத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படத்திலும் வைக்காத ஒரு காட்சியை இயக்குநர் வைக்கிறார். சரத்குமார் சுடுவதற்காக துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்தும்போது துப்பாக்கியில் தோட்டா இல்லை. வெங்கட் பிரபு படம் தானா என்று மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது . படத்தில் பல ஆச்சரியங்கள் இருக்கிறது

அதில் ஒன்று தான்
ஓடும் ரயிலில் ஒரு கையால் அர்விந்த் சாமி இன்ஜின் பெட்டியை கழற்றி விடுவது

இன்னொரு ஆச்சரியம்

சாகும் போது கூட ஜீவாகாமெடிபேசி
ஜாலியாக சாவது

இப்படி நிறைய இருந்தாலும் படம்
ரசிக்க வைக்கிறது
இந்த படம் பார்த்தாவது அஜீத்
வெங்கட் பிரபு வுக்கு அழைப்பு விடுப்பதாக

மங்காத்தா 2 வருமா
ரசிகர்கள் முடிவே நம் முடிவு